Showing posts with label #Bestweddingcards. Show all posts
Showing posts with label #Bestweddingcards. Show all posts

Monday, 25 September 2017

சங்கீத் நிகழ்ச்சி..


சங்கீத் நிகழ்ச்சி..

No automatic alt text available.



மருதாணி இந்த வார்த்தைக்கே தனி ஈர்ப்பு உண்டு. வட இந்திய திருமணங்களில் மெஹந்தி வைப்பதற்காகவே தனியாக சங்கீத் நிகழ்ச்சி நடத்துகின்றனர். ஆடல், பாடல்,கச்சேரியுடன் மணபெண்ணுக்கு மெஹந்தி வைக்கப்படும்.இந்த கலாச்சாரம் இப்போது தென்னிந்தியத் திருமணங்களிலும் தென்படத் தொடங்கியுள்ளது.
இன்றைய தலைமுறையினரின் திருமண விழாக்களில் சங்கீத்,மெஹந்தி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் வெகு அமோகமாக கொண்டாடப்படுகின்றது.


சங்கீத் நிகழ்ச்சி..

அரசாணிக்கல்

Image may contain: text

முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.

Friday, 22 September 2017

Affordable Wedding Invitations @PranavCards

Affordable Wedding Invitations @PranavCards


Image may contain: text




Choose Latest Wedding Cards available in vast designs only at #Pranavcards. Classy collection are available at our outlets @ http://bit.ly/2jF58wi

கடுக்கண் பூணல்


கடுக்கண் பூணல்


Image may contain: 1 person
கடுக்கண் பூணல்

முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.

Wednesday, 20 September 2017

தலைபாகை

Image may contain: 2 people, people smiling, text


மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் . அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.

கலப்பரப்பு


Image may contain: text
கலப்பரப்பு :

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குவதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும்.பாத்திரத்தில் (மங்கலப்பொருட்களை மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள்,பூச்சரம்)நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.


Tuesday, 19 September 2017

Latest Wedding Cards & Invitations: Buy Cheap Wedding Invitations @pranavcards.com

Latest Wedding Cards & Invitations: Buy Cheap Wedding Invitations @pranavcards.com


No automatic alt text available.

Make your Wedding card as royal as the Wedding~

Shop now at http://bit.ly/2kKAq5h

Buy Latest Wedding Cards Online Buy Latest Wedding Cards Online @pranavcards.com

Buy Latest Wedding Cards Online Buy Latest Wedding Cards Online @pranavcards.com


Image may contain: text


Our credit card invitations are unique and most people keep the invite as a memory. Start your wedding preparations with this elegant  Wedding Card by Pranavcards!

Shop Now at http://bit.ly/2kKAq5h

திருமண முளைப்பாலிகை போடல்

திருமண முளைப்பாலிகை போடல்

No automatic alt text available.

பெண் வீட்டில் மூன்று அல் லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலி ப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்தி ற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.


Sunday, 17 September 2017

கணையாழி எடுத்தல்


கணையாழி எடுத்தல்


Image may contain: 3 people, people smiling

மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும் போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் கணையாழியை தேடி எடுக்க வேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது நம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கணையாழி எடுத்தல்

மணமகள் பொங்கலிடுதல்

மணமகள் பொங்கலிடுதல் 





மணமகள் பொங்கலிடுதல் :


முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக்கொடுத்த இறைவனுக்கும்,முன்னோர்களுக்கும் சூரியன் முதலான தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்று அர்த்தமாகும். புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகும். இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

Thursday, 7 September 2017

ஆரத்தி


Image may contain: text
ஆரத்தி

ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் சொருக வேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைப்பழத்தின் நடுவே குத்துவதாகும்.ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படி கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தி தட்டைச் சுற்ற வேண்டும் (வலம் வழியாக).மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்ய வேண்டும். கீழே மூன்று தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.

Buy Latest Wedding Cards Online

Buy Latest Wedding Cards Online

No automatic alt text available.


Wedding invitations are an important part of your wedding day. 

Buy Latest Wedding Cards Online @http://bit.ly/2kKAq5h

அட்சதை

Image may contain: 3 people, people smiling, text

அட்சதை

அட்சதை என்பது குத்துப்படாததும்,பழுதற்றதும் என்பது பொருள்.பழுதுபடாத பச்சை அரிசியை போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்க்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதை தெளிக்கிறார்கள்.(நுனி முறியாத முழு அரிசியாக இருக்க வேண்டும்) நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா,பன்னீர்,மலர் இதழ்கள், ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

Pranav Cards Madurai

Pranav Cards Madurai

Image may contain: one or more people

Pranav Cards Madurai. Contact : 84899 28772 — in Madurai, India.