காதலனைக் கைபிடிக்க வேண்டுமா
கும்பகோணம் -தஞ்சாவூர் மார்க்கத்தில் சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஊர் திருநல்லூர்.கட்டுமலையின் மீது கோயில் இருக்கிறது. சுந்தரக்கிரி என்று அதை சொல்வார்கள்.நிறம் மாறும் சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ள கோயில் இது.
ஆதிசேஷனின் மகள் சுமதி.அவள் தனக்கு மனத்துக்கு இனிய கணவன் அமைய வேண்டும் என்று தினந்தோறும் நல்லூர்நாதனை வழிபட்டாள். அந்தக் காலக்கட்டத்தில் சோழநாட்டு இளவரசன் ஹரிதுவஜன் என்பவன் இறைவனை தரிசிக்க வந்தான்.சுமதியை பார்த்தான்.இருவரும் மனதால் இணைந்தனர். காதலாயினர். கைத்தலம் பற்றினர் என்கிறது புராணம். மனத்துக்கு இனியவரைக் கரம் பிடிக்க அருளும் கடவுள் நல்லூர்நாதர். எனவே மனதிற்கு பிடித்தவரை கைபிடிக்க நினைப்பவர்கள் இக்கோயுலுக்குச் சென்று வழிப்பட்டால் நினைத்தது நடக்கும்.
Pranav Cards In Madurai